71 நாள் பாலைவனத்துல தனியாக | Ricky Megee Real Life Survival Story #micmax — Transcript
Full transcript
- 0:02ரிக்கி மேகி ஒரு சாதாரண மனுஷன். ஆனா அவரோட
- 0:05வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவம் அவரை
- 0:07சாதாரண ஆள்ல இருந்து ஒரு பெரிய போராளியா
- 0:09மாத்திடுச்சு. பாலைவனத்தோட கொடூரமான
- 0:11வெயில்லையும் ராத்திரியோட எலும்பை உரைய
- 0:13வைக்கிற குளிர்லையும் பசியோடையும் சாகுற
- 0:16கடைசி நிலைமையிலயும் 71 நாள் தொடர்ந்து
- 0:18போராடினார். இது ஒரு கதை மட்டுமி இல்ல
- 0:20வாழ்க்கையில நாம ஒவ்வொரு போராட்டத்திலயும்
- 0:22கத்துக்க வேண்டிய ஒரு பாடம். வாங்க இந்த
- 0:24அசாதாரண மனுஷனோட உயிர் போராட்ட கதையை
- 0:26பார்ப்போம்.
- 0:36ரிக்கி மேக்கி ஆஸ்திரேலியாவில பிறந்த ஒரு
- 0:38சாதாரண பையன். அவனோட வாழ்க்கை மத்தவங்களை
- 0:40மாதிரியே ரொம்ப சாதாரணமாதான் போயிட்டே
- 0:42இருந்துச்சு. ஆனா திடீர்னு ஒரு நாள் அவங்க
- 0:44அப்பா இறந்து போனதால அவனோட வாழ்க்கையே
- 0:46மாறி போச்சு. அப்ப ரிக்கிக்கு ரொம்ப வயசு
- 0:48இல்லை. ஆனாலும் குடும்பத்தோட பொறுப்பை
- 0:50நாமதான் பார்த்துக்கணும்னு அவனுக்கு
- 0:51புரிஞ்சிருச்சு. படிப்பை பாதியில விடாம
- 0:53அதோட சேர்ந்து நிறைய வேலைகளையும் செய்ய
- 0:55ஆரம்பிச்சான். ஒரு தடவை எலக்ட்ரிசியனா
- 0:56வேலை இன்னொரு தடவை மீன்பிடி படகுல தூலி
- 0:58வேலை சில சமயம் பர்னிச்சர்கள தூக்கிட்டு
- 1:00போற வேலை இது மாதிரி கிடைச்ச எல்லா
- 1:02வேலையும் செஞ்சான். பணம் பெரிய கஷ்டமா
- 1:04இல்லனாலும் எப்பவுமே கொஞ்சம் பற்றாக்குறை
- 1:06இருந்துச்சு. 2006 ஆம் வருஷம் ரிக்கிக்கு
- 1:08அப்போ 36 வயசு. அப்போ அவனுக்கு ஒரு சின்ன
- 1:11அரசு கான்ட்ராக்ட் கிடைச்சது.
- 1:12ஆஸ்திரேலியாவில இருக்கற குயீன்ஸ்லாந்தில
- 1:14இருந்து வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில
- 1:16இருக்கிற போர்ட் ஹெட்லாண்ட்ங்கிற
- 1:17இடத்துக்கு சில முக்கியமான அரசு
- 1:19ஆவணங்களையும், பொருட்களையும் கொண்டு
- 1:21போகணும். இந்த வேலைக்கு சுமார் 3000 km
- 1:23தூரம் போகணும். விமானத்துல போறதுக்கு பணம்
- 1:26இல்லாததுனால, அவனோட பழைய கார்லயே
- 1:28போகலாம்ன்னு முடிவு பண்ணான். கார்ல
- 1:29போதுமான பெட்ரோல், கொஞ்சம் சாப்பாடு,
- 1:31தண்ணி பாட்டிலன்னு அத்தியாவசிய பொருட்களை
- 1:33மட்டும் எடுத்துட்டு, ரொம்ப ஆபத்தான
- 1:34பயணத்தை தொடங்கினான். அந்த பாதைக்கு வான்
- 1:37டைன் நெடுஞ்சாலைன்னு பேரு. அது வெறும்
- 1:39பாலைவனமும், வெயிலுமே இருக்கிற பாதை. அந்த
- 1:41பக்கத்துல மொபைல் சிக்னல் எதுவும்
- 1:43இருக்காது. ஒருவேளை கார் பழுதானா, உதவி
- 1:45கிடைக்கவே ரொம்ப கஷ்டம். நூற்றுக்கணக்கான
- 1:46கிலோமீட்டர் போனதுக்கு அப்புறம், ரோடோரம்
- 1:49ஒரு கார் பழுதாகி நின்னுட்டு இருக்கறத
- 1:50பார்த்தான். அந்த காருக்கு பக்கத்துல மூணு
- 1:52பேர் நின்னு உதவி கேட்டாங்க. ரிக்கி மனசு
- 1:54இறங்கி, அவங்களை தன்னோட கார்ல
- 1:56ஏத்திக்கிட்டான். கொஞ்ச தூரம் போனதும்,
- 1:58அந்த மூணு பேர்ல ஒருத்தன் தாகமா
- 2:00இருக்குன்னு சொல்லி, ஒரு பாட்டில்ல இருந்த
- 2:02தண்ணிய ரிக்கிக்கு கொடுத்தான். ரிக்கி
- 2:03வழக்கமா பாட்டியில அவனேதான் திறப்பான்.
- 2:05ஆனா, அன்னைக்கு என்னன்னு தெரியாம, அவங்க
- 2:07கிட்டயே பாட்டிலை திறக்க சொல்லி யோசிக்காம
- 2:10குடிச்சிட்டான். அந்த ஒரு நொடிதான் அவனோட
- 2:11வாழ்க்கையே புரட்டி போட்டுடுச்சு. அந்த
- 2:13பானத்துல ஏதோ மயக்க மருந்து கலந்து
- 2:15இருந்துச்சு. சில நிமிஷங்கள்ல ரிக்கிக்கு
- 2:17மயக்கம் வர ஆரம்பிச்சது. கண்ணு இருட்டாகி
- 2:19ஒருவித இருள் அவனோட பார்வை மறைச்சது.
- 2:21அப்புறம் அவன் மயங்கிட்டான். அவனுக்கு
- 2:23நினைவு வரும்போது அவன் ஒரு வெறிச்சோடின
- 2:25வரண்ட பாலைவனத்தில தனியா கிடந்தான். அவனோட
- 2:27கார், செருப்பு, போன், பை, சாப்பாடு,
- 2:30தண்ணி எதுவுமே அவன்கிட்ட இல்லை. அந்த மூணு
- 2:32பேரும் அவன்கிட்ட கொள்ளை அடிச்சிட்டு,
- 2:33செத்து போகட்டும்னு அவன் அங்கேயே
- 2:35விட்டுட்டு போயிருந்தாங்க. ரிக்கிக்கு
- 2:36என்னன்னு புரியல. சுத்தி முத்தி
- 2:38பார்த்தான். இங்க நமக்கு உதவ யாரும்
- 2:40இல்லைன்னு அவனுக்கு புரிஞ்சிருச்சு. அவன்
- 2:41இந்த போராட்டத்தை தனியாதான் போராடணும்.
- 2:43பசியோடையும், தாகத்தோடையும், கொடும்
- 2:45வெயிலோடும், காட்டு மிருகங்களோடும்
- 2:47ஒவ்வொரு நொடியும் அவனை துரத்துற சாவோடும்.
- 2:49ரிக்கி இப்ப பாலைவனத்தோட நடுவுல தனியா
- 2:51நின்னுட்டே இருந்தான். சத்தமில்ல
- 2:52கொளுத்திட்டு இருக்கிற காத்து. அனல்
- 2:54அடிச்சிட்டு இருக்கிற நிலம் மட்டும்தான்
- 2:56அங்க இருந்துச்சு. அவனோட கால்ல செருப்பு
- 2:58இல்லை. தரை கிட்டத்தட்ட 40லிருந்து 45
- 3:01டிகிரி செல்சியஸ் வெயில்ல நெருப்பு மாதிரி
- 3:02சுட்டுட்டு இருந்துச்சு. ஆனா அவனுக்கு ஒரு
- 3:04விஷயம் தெரியும். நம்ம உயிர் வாழணும்னா
- 3:06நடந்துட்டே இருக்கணும். சுடுமணல்ல வெறும்
- 3:08காலுல நடக்கறது ஒரு பெரிய கொடுமை. அவனோட
- 3:10கால்கள் எரிய ஆரம்பிச்சது. கொப்புளங்கள்
- 3:12வந்து தோல் உரிஞ்சது. நாள் ஏற ஏற வெயில்
- 3:15இன்னும் அதிகமாச்சு. வானத்துல இருந்து
- 3:16நெருப்பு கொட்டற மாதிரி இருந்துச்சு.
- 3:18உடம்பு சூடாச்சு கண்ணு உளர்ந்து போச்சு
- 3:20உதடுகள் வெடிச்சு தாகம்னால ஒரு வார்த்தை
- 3:22கூட பேச முடியல. நிறைய நேரம் நடந்த பிறகு
- 3:24அவனோட உடம்பு சோர்ந்து போச்சு. ஆனா அவனோட
- 3:26மனசு மட்டும் வாழணும்னு உறுதியா
- 3:28இருந்துச்சு. அப்போ அவனுக்கு தூரத்துல ஒரு
- 3:30மாய தோற்றம் தெரிஞ்சது. ஒரு குளம் தண்ணி
- 3:32நிறைஞ்ச குளம் மாதிரி அவன் வேகமா அங்கே
- 3:34ஓடினான். ஆனா அது வெறும் மணல் அவனோட
- 3:36கண்ணோட ஏமாற்றம். அவனோட கையில மணல்
- 3:38மட்டும்தான் கிடைச்சது. உடம்பு சோர்ந்து
- 3:39போயிருந்தாலும் வாழணும்னு ஆசை மட்டும்
- 3:41குறையல. கொஞ்ச நேரம் அலைஞ்சதுக்கு
- 3:43அப்புறம் அவனுக்கு ஒரு சின்ன குளி
- 3:45தெரிஞ்சது. அதுல பிசு பிசுப்பான அழுக்கான
- 3:47தண்ணி இருந்துச்சு. ஏதோ ஒரு மிருகம் அங்க
- 3:49வந்து குடிச்சிருக்கலாம்னு அவன்
- 3:50நினைச்சான். யோசிக்காம அந்த கெட்டவாடை
- 3:52அடிக்கிற சேறு மாதிரி இருக்கிற தண்ணிய
- 3:54குடிச்சான். அந்த தண்ணி குடிக்கிறதுக்கு
- 3:56நல்லதில்லைன்னு அவனுக்கு தெரியும். ஆனா
- 3:57அதை குடிக்கலன்னா சில மணி நேரத்துல
- 3:59செத்துடுவோம்னு அவனுக்கு தெரியும். அந்த
- 4:01தண்ணி அவனுக்கு கொஞ்சம் நிம்மதியை
- 4:02கொடுத்தது. சாயங்காலம் வந்துச்சு. சூரியன்
- 4:04மறைஞ்சதுக்கு அப்புறம் பாலைவனத்தோட குளிர்
- 4:06காத்து வீச ஆரம்பிச்சது. பகல்ல இருந்த
- 4:08வெயில் ராத்திரியில எலும்ப உரையற மாதிரி
- 4:10மாறிடுச்சு. அடுத்த பெரிய பிரச்சனை எங்க
- 4:12படுத்து தூங்குறது தரையில படுத்தா
- 4:14பூச்சிகள் தேல்கள் பாம்புகளோட படுக்கணும்.
- 4:16நல்ல வேலை அவனுக்கு ஒரு சின்ன குகை மாதிரி
- 4:18இடம் தெரிஞ்சது. அவன் தைரியத்தோட அங்க
- 4:20போனான். இருட்டா இருந்தாலும் தலையை மறைக்க
- 4:22ஒரு கூரையாவது இருந்துச்சு. அவன் அங்கேயே
- 4:24உட்காந்துகிட்டான். அந்த ராத்திரி அவன்
- 4:26தூங்கவே இல்லை ஏன்னா குகையில பூச்சிகள்
- 4:28ஊர்ந்துட்டே இருந்துச்சு. ஒன்னு அவனோட
- 4:30கால்ல குத்துச்சு இன்னொன்னு கையில.
- 4:32ஆனாலும் இதெல்லாம் சாவ விட மோசமானது
- 4:34இல்லைன்னு அவனுக்கு தெரியும். இததான்
- 4:36சாப்பிடணும்னா சாப்பிடுறேன்னு அவன்
- 4:38தனக்குள்ள பேசிக்கிட்டான். ஒரு விஷயத்தை
- 4:39அவன் புரிஞ்சுக்கிட்டான். ஒரு மனுஷன்
- 4:41பசியால சாக மாட்டான். தைரியம் இழந்தாதான்
- 4:43சாவான். அவன் உயிர் வாழ எல்லாத்தையும்
- 4:45சாப்பிட ஆரம்பிச்சான். பூச்சிகள், ஈக்கள்,
- 4:47இலைகள் சில சமயம் அவனோட வேர்வையை கூட
- 4:49நக்கினான். அந்த பயங்கரமான குளிர் நிறைந்த
- 4:52ராத்திரி அவனோட வாழ்க்கையில ரொம்ப பெரிய
- 4:54ராத்திரியா இருந்துச்சு. ஆனாலும் அவன்
- 4:56உயிருடன் இருந்தான். 70 நாளுக்கும் மேல
- 4:58ரிக்கி பாலைவனத்தோட நடுவுல அவனோட
- 5:00வாழ்க்கைக்காக போராடினான். அவனோட தோல்
- 5:02வெந்து போயிருந்துச்சு. உதடுகள் வெடிச்சு
- 5:04உடம்பு வெறும் எலும்பு கூடு மாதிரி
- 5:06இருந்துச்சு. அவன் எங்க போறான்னு அவனுக்கே
- 5:08தெரியாம நடந்துட்டு இருந்தான். ஒவ்வொரு
- 5:09அடியும் சாவை நோக்கி போற மாதிரி
- 5:11இருந்துச்சு. அப்போ ஒரு அதிசயம் நடந்தது.
- 5:12ரிக்கியோட மூடின கண்ணுல ஒரு குளிர்ச்சியான
- 5:15துளி விழுந்துச்சு. அது ஒரு தேவதையோட
- 5:16ஸ்பரிசம் மாதிரி இருந்துச்சு. அந்த நொடி
- 5:18வானம் அவனுக்காக அழுவுற மாதிரி அவனுக்கு
- 5:20தோணுச்சு. ரிக்கி தன்னோட கண்ணை திறக்க
- 5:23கருமேகங்கள் சூழ்ந்து வானம் மின்னலால
- 5:25பிளவுபட்டு கடுமையான மழை கொட்ட
- 5:27ஆரம்பிச்சது. அந்த வெறிச்சோடின இடத்துல
- 5:29இயற்கை உயிர் வாழும் ஆசையை அவனுக்கு
- 5:31கொடுத்தது. ரிக்கி ஒரு நொடி கூட
- 5:33தாமதிக்கல. அவன் குனிஞ்சு ரெண்டு
- 5:35கைகளாலயும் மணலை தோண்ட ஆரம்பிச்சான். இந்த
- 5:37வாய்ப்பு கடைசி வாய்ப்பா இருக்கலாம்னு
- 5:39அவனுக்கு தெரியும். மூணுல இருந்து நாலு
- 5:40பெரிய குளிகளை தோண்டி மழை தண்ணி அதுல
- 5:42நிறைஞ்சது. அவன் திரும்ப திரும்ப அந்த
- 5:44குளியில இருந்து தண்ணி எடுத்து
- 5:45குடிச்சான். எவ்வளவு நேரம் குடிக்க
- 5:47முடியுமோ அவ்வளவு நேரம் குடிச்சான். ஏன்னா
- 5:49இந்த மழை எப்போ நிக்கும்னு யாருக்கும்
- 5:51தெரியாதுன்னு அவனுக்கு தெரியும்.
- 5:52ரிக்கியோட காஞ்சு போன தொண்டையும் வெடிச்ச
- 5:54நாக்கும் ஒவ்வொரு வாயிலையும் வாழ்க்கையை
- 5:56உணர்ந்துச்சு. ஒரு மணி நேரத்துக்கு
- 5:57அப்புறம் மழை நின்னுடுச்சு. அந்த
- 5:59இரக்கமற்ற உண்மை திரும்பவும் வந்துச்சு.
- 6:01மணல் மெதுவா எல்லா தண்ணியையும்
- 6:03உரிஞ்சுக்கிடுச்சு. குளிகள்ல இப்ப சேறு
- 6:04மட்டும்தான் இருந்துச்சு. ஆனா அவனுக்குள்ள
- 6:07திரும்பவும் வாழணும்னு ஒரு நெருப்பு
- 6:08இருந்துச்சு. அவனுக்கு அப்போ பாலைவனத்துல
- 6:10சுமார் 60 நாள் ஆகி இருந்துச்சு. அவனோட
- 6:12உடம்பு வெறும் எலும்பு கூடா மாறிடுச்சு.
- 6:14அவன் சில சமயம் ஓடுற பள்ளிகளை பிடிச்சு
- 6:16சாப்பிட்டான். சில சமயம் அவனோட சிறுநீரை
- 6:18குடிச்சான். சில சமயம் பூச்சிகளை
- 6:20சாப்பிட்டான். பகல்ல சுட்டெரிக்கிற வெயில்
- 6:22ராத்திரியில காட்டு மிருகங்களோட பயம்
- 6:24ஒவ்வொரு நொடியும் சாவோட நிழல் ஆனாலும்
- 6:26அவன் தொடர்ந்து போராடினான். ஒவ்வொரு தடவை
- 6:28அவன் கீழே விழுந்த போதும் உள்ள ஒரு குரல்
- 6:31இல்ல நான் இன்னும் உயிரோடன் இருக்கேன்னு
- 6:33சொல்லுச்சு. அப்புறம் அந்த சரித்திரமான 72
- 6:35வது நாள் வந்துச்சு. ஏப்ரல்ஐந்தாம் தேதி
- 6:372006. அந்த நாள் அவன் ஒரு குன்றோட
- 6:40பக்கத்துல மயங்கி கிடந்தான். அவனோட
- 6:42துணிகள் கிழிஞ்சி இருந்துச்சு. உடம்பு
- 6:43கருத்து போயிருந்துச்சு. கண்ணு மூடி
- 6:45இருந்துச்சு. அதே சமயத்துல பக்கத்துல
- 6:47இருக்குற பிரிண்டோடு ஸ்டேஷன்ல இருந்து
- 6:48ரெண்டு பேர் கிரெக்ஹாட் மற்றும்
- 6:50மார்க்லிபோர்ட் அந்த வழியா போனாங்க.
- 6:52தூரத்துல ஒரு வித்தியாசமான பொருளை
- 6:54பார்த்தாங்க. முதல்ல அது ஒரு மிருகம்னு
- 6:56நினைச்சாங்க. ஆனா பக்கத்துல வந்த போது அது
- 6:58ஒரு மனுஷன் மாதிரி இருக்கிற எலும்பு கூடு
- 7:00ஆனா அசைஞ்சிட்டு இருந்துச்சு. மனித நேயம்
- 7:02அவங்களை தடுத்து நிறுத்த அவங்க உடனே
- 7:04ஹெலிகாப்டர் மூலம் உதவிக்கு அழைச்சாங்க.
- 7:06ரிக்கி ராயல் டார்வின் மருத்துவமனைக்கு
- 7:08கொண்டு போகப்பட்டான். அங்க அவன் ஆறு நாள்
- 7:09மயக்கத்திலயே இருந்தான். டாக்டர்கள் இந்த
- 7:11மனுஷன் ஒரு அதிசயம்னு சொன்னாங்க.
- 7:13ரிக்கியோட எடை 106 kgல இருந்து 48 kgவா
- 7:16குறைஞ்சிருந்துச்சு. கிட்டத்தட்ட அவனோட
- 7:18உடம்புல பாதி போயிருந்துச்சு. ரிக்கி மேகி
- 7:2071 நாள் சாவோட போராடி 72 வது நாள் அதாவது
- 7:24ஏப்ரல் 5ஆம் தேதி 2006ல திரும்பவும்
- 7:27வாழ்க்கையை வாழ ஆரம்பிச்ச ஒரு பேரு. ஒரு
- 7:29மனுஷனுக்கு வாழணும்னு ஆசை உறுதியா இருந்தா
- 7:32வானம் கூட அவனுக்காக மழை பெய்யும். மணல்
- 7:34கூட தண்ணி குடிக்க அனுமதிக்கும். சாவு கூட
- 7:36தோத்துடும். சோ பிரண்ட்ஸ் இதுதான் ரிக்கி
- 7:38மேக்கியோட 71 நாள் பாலைவன பயணம். இந்த
- 7:41வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா
- 7:43வீடியோவை ஒரு லைக் பண்ணிட்டு மறக்காம நம்ம
- 7:46சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிருங்க. அடுத்த ஒரு
- 7:48இன்ட்ரஸ்டிங்கான வீடியோல உங்களை வந்து
- 7:50பார்க்கிறேன் நன்றி.
- 7:54[இசை]
About this transcript
This page contains the full transcript of 71 நாள் பாலைவனத்துல தனியாக | Ricky Megee Real Life Survival Story #micmax by MICMAX TAMIL, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,096 words across 237 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.